பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் உள்ள வௌ்ளாற்றில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்புச்சுவர் இடிந்து வெள்ளம் ஊருக்குள் புகும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து சேதமடைந்த தடுப்புச்சுவரை உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியமாகும்.