பண்ருட்டி அடுத்த ஆ.நத்தம் காலனியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிட வளாகத்தை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் சேறும், சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே அங்கன்வாடி மைய வளாகத்தை சுத்தம் செய்து பராமாிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.