மதுரை ஆனையூர் மற்றும் இந்திராநகர் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவை சாலையில் செல்பவர்களை அச்சுறுத்துவதுடன் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரங்களில் சாலையில் கூட்டம், கூட்டமாக படுத்து கொள்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.