திண்டுக்கல் அருகே சாணார்பட்டி கூவனூத்து கிராமத்தில் உள்ள அரசு உடற்பயிற்சி கூடம் பயன்பாடு இன்றி பூட்டி கிடக்கிறது. மேலும் இதை சுற்றி செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே உடற்பயிற்சி கூடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.