வில்லியனூர் ஒதியம்பட்டு சாலையில் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றிதிரிகின்றன. அவை சாலையில் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. காசி விசுவநாதர், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவில் வளாகங்களிலும் சர்வ சாதாரணமாக பன்றிகள் சுற்றித்திரிகின்றன. பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை.