ஊட்டியில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சேரிங்கிராஸ் செல்லும் சாலையோரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரும்பு கம்பி மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரும்பு தடுப்பு வாகனம் மோதியதில் சேதம் அடைந்து இருக்கிறது. நீண்ட நாட்கள் ஆகியும் அதை சீரமைக்கவில்லை. எனவே அந்த இரும்பு தடுப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.