தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-12-22 10:28 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தெற்குத்தொண்டைமான்ஊரணியிலிருந்து வையாரி குளம் வழியாக செல்லும் சாலையில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த தரைப்பாலம் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த தரைப்பாலம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்