வரத்து வாய்க்கால்களை சீரமைக்க கோரிக்கை

Update: 2024-12-22 10:22 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி கிராமத்தில் நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்வதற்கு வரத்து வாய்க்கால்கள் உள்ளது. ஆனால் பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலை அமைக்கப்படும் போது அடைக்கம்பட்டியில் வரத்து வாய்க்கால்கள் பராமரிக்காமல் மூடி சாலை அமைத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலை அமைத்த பிறகு சில கடைகளின் உரிமையாளர்கள் மீதமுள்ள வரத்து வாய்க்கால்களையும் மூடி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தற்போது மழைக்காலங்களில் ஏரி, குளங்களுக்கு காடுகளில் இருந்து வரும் தண்ணீர் செல்ல முடியாமல் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் போர்க்கால அடிப்படையில் அடைக்கம்பட்டியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்ல வசதியாக மாநில நெடுஞ்சாலையில் உள்ள வரத்து வாய்க்காலை விரைந்து சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி