கிராம சேவை மையம் திறக்கப்படுமா?

Update: 2024-12-22 10:18 GMT
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே நன்செய் புகழூர் ஊராட்சி கிராம சேவை மைய கட்டிடம் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று செல்லும் வகையில் இந்த கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைத்ததோடு சரி இந்த கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலாயுதம்பாளையம், பரமத்தி வேலூர் பகுதிக்கு சென்று தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம சேவை மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்