குமராட்சி அருகே வீரநத்தம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கு அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக வரும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?