நுழைவாயில் அமைக்கலாமே!

Update: 2024-12-15 17:01 GMT
  • whatsapp icon

 வீரபாண்டி ஒன்றியம் ராஜபாளையத்திற்குட்பட்ட பகுதியில் ஆட்டையாம்பட்டி பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையம் அருகே சேலம் செல்லும் வழியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த அரசு மருத்துவமனைக்கு நுழைவாயில் இல்லாத காரணத்தினால் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவமனை இருப்பது தெரிவதில்லை. இதனால் வெளியூரில் இருந்து அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே மருத்துவமனை இருப்பது அனைவருக்கும் தெரியும் படி பெயர் பலகையும், நுழைவாயிலும் அமைக்க வேண்டும் என்பதே நோயாளிகளின் கோரிக்கையாக உள்ளது.  

மேலும் செய்திகள்