திறக்கப்படாத ரேஷன் கடை

Update: 2024-12-15 16:51 GMT

மதுரை மாவட்டம் இரணியம் அருகே ஜாங்கிட் நகரில் 6 மாதங்களுக்கு முன்பு ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை திறக்கப்படவில்லை. மேலும் தற்போது கட்டப்பட்டுள்ள  புதிய ரேஷன் கடை கட்டிடம் திறக்கப்படுவதற்கு முன்பே சேதமடைந்து காணப்படுகிறது. எனவே ரேஷன் கடையை சீரமைத்து  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்