பராமரிப்பின்றி கிடக்கும் கழிப்பிடம்

Update: 2024-12-15 15:15 GMT

சத்தியமங்கலம் அருகே இக்கரைநெகமம் ஊராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் உள்ள பெண்கள் பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் கழிப்பிடத்தை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துகள் நடமாட்டம் இருப்பதால் பெண்கள் கழிவறைக்கு செல்ல அச்சப்படுகின்றனர். கழிப்பிடத்தை பராமரித்து முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்