தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஜார் பகுதியில் ஏராளமான மாடுகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.