அண்ணாகிராமம் ஒன்றியம் கள்ளிப்பட்டு ஊராட்சியில் க.குச்சிபாளையம் நான்குமுனை சந்திப்பு சாலையில் அமைந்துள்ள உயர் கோபுர சூரிய மின் விளக்கு பழுதாகியுள்ளது. இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள உயர் கோபுர சூரிய மின்விளக்கை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவாா்களா?