ஊராட்சி சேவை மையத்தை திறக்க கோரிக்கை

Update: 2024-12-08 14:17 GMT

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி நொய்யல் குறுக்குச்சாலை பங்களா நகரில் கிராம சேவை மைய கட்டிடம் சுமார் ர.13 லட்சம் செலவில் கட்டப்பட்டது .இந்த சேவை மையக் கட்டிடத்தில் பொதுமக்கள் ,பள்ளி , கல்லூரி மாணவ, மாணவிகள் ,விவசாயிகள் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று செல்லும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைத்ததோடு சரி இந்த கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இந்த சேவை மையத்தில் எந்த சேவையும் நடைபெறவில்லை. எனவே வேட்டமங்கலம் ஊராட்சி கிராம சேவை மைய கட்டிடத்தை திறந்து வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்