கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே புகழூர் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பள்ளவாய்க்காலை ஒட்டி உள்ள கரை ஓரமாக விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையின் இருபுறமும் செடி, கொடிகள், நாணல் தட்டு அதிகமாக வளர்ந்துள்ளதால் , ஒருநபர் மட்டுமே நடந்து செல்லும் அளவில் பாதை உள்ளது.இங்கு விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் விளைநிலங்களுக்கு இடு பொருட்களை கொண்டு செல்லவும், விளைந்த பொருட்களை கொண்டுவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றி வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.