போதை ஆசாமிகளால் தொல்லை

Update: 2024-12-08 14:12 GMT

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் தாமரை தெரு மற்றும் வைத்தீசுவரன் தெரு பகுதிகளில் சிலர் போதை பொருட்கள் மற்றும் மதுவை உட்கொள்கிறார்கள். குறிப்பாக இச்சம்பவம் மாலை முதல் நள்ளிரவு வரை நடக்கிறது. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்