பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-12-08 14:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் அமைந்துள்ள கூடுவாஞ்சேரி ஏரியை சுற்றிலும் கரை மற்றும் நடைபாதை அமைக்கும் பணி ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடந்து முடிந்தது. ஆனால் இந்த பணிகள் முடிந்து சில காலங்களிலேயே கரை மற்றும் நடைபாதை சிதலமடைந்து காணப்படுகிறது. மேலும், ஏரியில் ஆகாயத்தாமரை அடர்ந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்து கட்டமைப்பை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்