சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து

Update: 2024-12-08 13:45 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடைவீதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சாலையின் நடுவே படுத்து கொள்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சில நேரங்களில் மாடுகள் மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் சாலையில் வரும் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை சாலையில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்