நிழற்குடையை சூழ்ந்த செடி, கொடிகள்

Update: 2024-12-01 17:02 GMT

திண்டுக்கல் ரவுண்டுரோடு சிலுவத்தூர் சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. நிழற்குடையை புதர்கள் சூழ்ந்து இருப்பதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்கிறது. இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தவே அச்சப்படுகின்றனர். எனவே நிழற்குடையை சூழந்துள்ள புதர்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்