எரியாத மின் விளக்குகள்

Update: 2024-12-01 14:45 GMT

மதுரை பரவை அருகில் உள்ள ரெயில்வே சுரங்க பாதையில் இருக்கும் மின் விளக்குகளில் ஒரு சில மின்விளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். மேலும் தற்போது மழை காலம் என்பதால் அப்பாதையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் மின் விளக்குகளை சரி செய்து தரவும் மற்றும் தேங்கிய மழைநீர் விரைவில் வெளியேற வழிவகை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்