விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் வாகனங்களை துரத்திச் செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்வோரை அச்சுறுத்துகின்றனர். எனவே சாலையில் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.