நோய் தாக்குதலுக்கு ஆலோசனை வேண்டும்

Update: 2024-12-01 11:41 GMT

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இப்பகுதி வறட்சியான பகுதியாதலால் முருங்கைப் பயிரிடுதல் மற்றும் ஆடு, மாடுகள் வளர்ப்பு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருங்கை மரங்கள், முருங்கை செடிகள் பச்சை பசேலென தழைக்கத் தொடங்கியுள்ளது. மழைக்காலங்களில் முருங்கை மரங்களில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். முருங்கை பூ உதிர்தல், இலைகள் உதிர்தல், அதிக அளவில் காணப்படும். எனவே முருங்கையில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆலோசனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்