தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் பகுதியில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் மாடுகள் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. மாடுகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுக்கோட்டை நகர் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.