பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படும் ரேஷன்கடை

Update: 2024-12-01 10:02 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் நல்லூர் உள்ளது. இப்பகுதியில் பழுதடைந்த கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் மேற்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. புதிதாக கட்டப்பட்ட கட்டிடமும் பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டதால் பழுதடைந்து இருக்கிறது. எனவே, பழுதடைந்த கட்டிடத்தால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் அதிகாரிகள் ஆய்வு செய்து ரேஷன் கடையை பாதுகாப்பான கட்டிடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்