பாதிக்கப்படும் குழந்தைகள்

Update: 2024-11-24 14:26 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்குன்றம் சங்கோதை அம்மன் கோவில் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் தெரு முழுவதும் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ளது. அதிக அளவு துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. டெங்கு, மலேரியா போன்ற நோயினால் அதிக அளவு குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்