செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பேரமனூர் கிராமத்தில் உள்ள ரெயில்வே தெருவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.