அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் ஊராட்சி முக்குளம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முக்குளம் கிராமத்தில் இருந்து நெல்லித்தோப்பு செல்லும் சாலையில் சுடுகாடு உள்ளது. அந்த சுடுகாடு இருக்கும் பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அவர்களது கட்டுபாட்டில் வைத்து உள்ளனர். இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று தகனம் மற்றும் அடக்கம் செய்ய வழி இல்லாமல் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.