திண்டுக்கல்லை அடுத்த கோவிலூர் உப்பளப்பட்டி பிரிவு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகத்துக்கான கட்டிடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த இடம் தற்போது செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.