சீரமைக்க வேண்டும்

Update: 2024-11-17 12:52 GMT

குளச்சல் அருகே உள்ள சலேட்நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தின் அருகில் குடிநீர் தேவைக்கான பயன்படுத்தப்படும் கிணற்றில் மீது அமைக்கப்பட்டுள்ள தகரத்தினால் ஆன மூடியை முறையாக பராமரிக்காததால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தைகள் நலன்கருதி கிணற்றின் சேதமடைந்த மூடியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வன், சலேட்நகர்.

மேலும் செய்திகள்