திருநாவலூர் அருகே கெடிலம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் பாழடைந்த அரசு கட்டிடங்கள் உள்ளன. இதை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அங்கு சூதாடுவது, மதுகுடிப்பது உள்ளிட்ட குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.