சேதப்படுத்தப்படும் கான்கிரீட் சாலை

Update: 2024-11-03 17:43 GMT

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் கான்கிரீட் சாலைகள், அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பார்ப்பதற்கு திருப்பூரை ேமலும் மெருகூட்டுவதாக உள்ளது. ஆனால் முதலுக்கே மோசம் வந்தது போல் தற்போது அங்காங்கே கான்கிரீட் சாலையை உடைத்து குழாய் பதிக்கிறார்கள். அதன்பின்னர் கான்கிரீட் சாலை அப்படியே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அந்த சாலையில் குழி நாளுக்குநாள் பெரிதாகி விபத்து ஏற்படும் நிலை வந்து விட்டது. கான்கிரீட் சாலையை தோண்டுபர்களிடம் உரிய கட்டணத்தை வசூலித்து அந்த இடத்தில் மீண்டும் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்