குழந்தைகள் பாதிப்பு

Update: 2024-11-03 10:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி பஞ்சாயத்திற்குட்பட்ட நரசங்குப்பம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நெய்குப்பி பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் நரசங்குப்பம் ஏரி அருகில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மூச்சுத்திணறல் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவ்வபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வரும் இந்த பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊரகவளர்ச்சி துறை உயர் அதிகாரிகளிடம் கடந்த 1 வருடத்திற்கு மேலாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த மக்களை பாதிப்பிற்கு ஆளாக்குகிறார்கள். எனவே, அந்த பகுதி மக்களின் பாதிப்பிற்கு தீர்வு காண எந்த துறை அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுப்பார்கள்?

மேலும் செய்திகள்