நாமக்கல் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுவான பிரச்சினையாக தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இருப்பினும் சேந்தமங்கலம் சாலையில் அதிக அளவில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் இருப்பதால், இங்கு தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவை இரவு நேரங்களில் ரெயில் நிலையங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துகின்றன. இதனால் பயந்து வேகமாக செல்லும் நபர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.