பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சி சரோஜினி நகருக்கு செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் இல்லை. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தவறி வாய்க்காலில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.