விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள பெரும்பாலான பயணிகள் நிழற்குடைகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் பயணிகள் நலன் கருதி நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.