திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா சோலையம்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென கிராமத்தில் சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கும், இறுதி சடங்கு செய்வதற்கும் தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளும் வகையில் அடிப்பம்பு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அடிப்பம்பானது தற்போது பழுதடைந்து பயனற்று உள்ளது. இதனால் இந்த சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு வந்து இறுதி சடங்கு செய்ய போதிய தண்ணீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.