தஞ்சை மாவட்டம் கும்பகோணம் குமரங்குடி ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் பராமரிப்பின்றி பழுதடைந்து இருக்கிறது. சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேற்கூரை பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே, கட்டிடத்தின் உறுதி தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.