திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேய்க்கல் நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் முகப்பு வாயிலில் பழைய கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இடித்து விட்டனர். அதே இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கபடாததால் சமூக விரோதிகள் சிலர் பள்ளி வளாகத்தில் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை பள்ளி வளாகத்தில் உடைத்து விட்டு செல்வதால் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.