சிமெண்டு களம் வேண்டும்

Update: 2024-10-20 13:25 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் இருந்து ஸ்ரீபுரந்தான் வரை உள்ள நெடுஞ்சாலையில் தற்போது சோளம் மற்றும் கடலை போன்ற தானியங்களை விவசாயிகள் இடைவிடாமல் காய வைப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விபத்து அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் விளை பொருட்களை காயவைக்கும் அளவிற்கு சிமெண்டு களம் அமைத்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்