கூடுதல் வங்கி அவசியம்

Update: 2024-10-13 18:14 GMT
  • whatsapp icon
சிறுபாக்கத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று மட்டும் செயல்பட்டு வருகிறது. இதனால் சிறுபாக்கம் மற்றும் அரசங்குடி, எஸ்.புதூர், பனையாந்தூர், வள்ளிமதுரம், வ.மேட்டூர், நரையூர், ஒரங்கூர் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் இந்த வங்கியை மட்டும் தான் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதன் காரணமாக இந்த வங்கியில் எந்நேரமும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் வெகுநேரம் காத்து நிற்கும் அவலம் உள்ளது. எனவே, சிறுபாக்கத்தில் கூடுதலாக அரசு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்