திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அரசு பஸ் பணிமனையில் இருந்து தினசரி 32 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, மதுரை, பழனி, ஈரோடு, சேலம் முதலான தொலைதூர வழித்தடங்களும், பெரம்பலூர், திருச்சி, ஆத்தூர், நாமக்கல் ஆகிய வழித்தடங்களிலும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பணிமனையின் உள்புறம் சேறும், சகதியுமாக இருப்பதால் மழை காலங்களில் ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பணிமனையின் உள்புறம் சிமெண்டு தளம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.