அரியலூர் மாவட்டம் அம்மாக்குளம் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை இரவும், பகலும் சாலையோரம் நின்று கொண்டு அந்த வழியாக நடந்து வருபவர்களையும், இருசக்கர வாகனங்களில் வருபவர்களையும் கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதன் காரணமாக குழந்தைகளை வெளியில் அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு நாய்கள் தொல்லையை அறவே தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.