ஆனைவாரி ஓடையை சீரமைக்கப்படுமா?

Update: 2024-10-06 11:03 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் மறந்துபோன நீர்நிலைகளில் ஒன்றாக ஆனைவாரி ஓடை விளங்குகிறது. குன்னம், அந்தூர், அசூர், தங்க நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஓடைகளாக உற்பத்தியாகி பிறகு ஒன்று சேர்ந்து துங்கபுரம் வழியாக அரியலூர் மாவட்டத்தில் நுழைந்து இறுதியாக வெள்ளாற்றில் கலக்கிறது. இந்த ஆனைவாரி ஓடையானது பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளால் இருந்த இடமே தெரியாத நிலையில் உள்ளது. ஆனைவாரி ஓடை மற்றும் அதன் கிளைகளை உரிய நிதி ஒதுக்கி முறையாக சீரமைப்பதோடு அருகாமையில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீரைத் திருப்புவது தொடர்பாக ஆய்வு செய்து திட்டங்களை செயல்படுத்தவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்