செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில், பயணிகள் நடைபாதையில் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனங்களை அகற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.