திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள பேரூரில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை செயல்படும் இடத்தில் சாலை குறுகளாக உள்ள நிலையில், மதுப்பிரியர்கள் தங்களின் வாகனங்களை சாலையோரம் நிறத்திவிட்டு டாஸ்மாக் கடைக்கு செல்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதியில் நடமாட பெண்கள் பெரிதும் அச்சப்படுவதுடன், அடிக்கடி விபத்து நடப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.