சாலையில் திரியும் மாடுகள்

Update: 2024-09-29 15:25 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி கன்னிவாக்கம், நெல்லிக்குப்பம் சாலையில் அதிக அளவு மாடுகள் சுற்றித்திரிகிறது. இதனால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. மேலும், இந்த பகுதி வழியாக செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் வரை அனைவரையும் முட்டுவதற்கு துரத்துகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்