கரூர் மாவட்டம் புகழூர் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பள்ளவாய்க்காலை ஒட்டி உள்ள கரையில் விவசாயிகள், பொதுமக்கள் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையின் இருபுறமும் நாணல் தட்டு அதிகமாக வளர்ந்துள்ளதால் , ஒருநபர் மட்டுமே நடந்து செல்லும் அளவில் பாதை உள்ளது.இங்கு விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் விளைநிலங்களுக்கு இடு பொருட்களை கொண்டு செல்லவும் விளைந்த பொருட்களை கொண்டுவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கூலி தொழிலாளர்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு பயிரிடப்படும் வாழை, நெல், கரும்பு, கோரை, போன்ற பொருட்களை ஏற்றி வருவதற்கு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் மிகவும் சிரமப்படுகிறன்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.