செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர் 56-வது வார்டு காமராஜர் நெடுஞ்சாலை அருகில் தாமரை குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் கருவேலமரம் நிரம்பி காணப்படுகிறது. மேலும், குளத்தின் உள்ளே ஆகாய தாமரைகளும் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் இந்த குளத்தை உபயோகிக்க முடியாமல் உள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.